Religion
இன்று இனிதாக ... (05.09.2026) செங்கல்பட்டு
ஆன்மிகம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் கோவில் அதிருத்ர மஹாயக்ஞம், சண்டி ஹோமம் 5வது நாள் பூஜை, நிகழ்ச்சிகள்: காலை 6:00 முதல் இரவு 10 மணி வரை. மாலை 6:15 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஆசார்யா ஜெயந்தியின் கலா தரிசனம் வழங்கும் கபாலி 63 மூவர் நிகழ்ச்சி. இடம்: பிரியா நகர் விரிவு 3, ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகில், ஊரப்பாக்கம்.
பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.
மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை: காலை 7:15 மணி. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பால சுப்ரமணிய சுவாமி சத்சங்கம் விக்னேஷ் குழுவினரின் 'மேஜிக்கல் வாய்ஸ்' பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 11 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை: 5:30 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
கைலாய நாதேஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: நித்திய பூஜை: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
கைலாச நாதர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
பொது ரத்ததான முகாம் நந்திவரம் - கூடுவாஞ்சேரி லயன்ஸ் கிளப், ஹிந்து மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12 மணி வரை. இடம்: ஐயனார் ஹோட்டல் பார்ட்டி ஹால், மின்வாரியம் அருகில், கூடுவாஞ்சேரி.
இலவச சித்த, ஆயுர்வேத மருத்துவ முகாம் நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: எண் 55, பெரியார் ராமசாமி தெரு, ரயில்வே சுரங்க பாதை அருகில், கூடுவாஞ்சேரி.



