Lifestyle and human interest
காவலர் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!
காவலர் நாளை முன்னிட்டு முதல்வரின் வாழ்த்துச் செய்தி.
காவலர் நாளை முன்னிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை.
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும்.
மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
Chief Minister C. Joseph Vijay has issued a message of greetings on the occasion of Police Day.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.