Politics
மாஜி அமைச்சருடன் மாநகர செயலாளர் செயற்குழு கூட்டத்தில் வாக்குவாதம்
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர்
தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில்
நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தலைமை
கழக பிரதிநிதிகளான சபாபதி மோகன், உடுமலை எம்.எல்.ஏ., ஜெயக்குமார்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக
செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.
எம்.பி. பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்துக்கு
அனுமதிக்கப்பட்டனர். தி.மு.க.,வில் மாவட்ட மறுவரையறை செய்ய
உள்ளது. இதற்கு கட்சி பொறுப்பாளர்களிடம் கருத்து கேட்கும் வகையில்
கூட்டம் அமைந்தது. அதாவது தி.மு.க.,வில் நடக்க உள்ள அமைப்பு தேர்தலை
முன்னிட்டு ஒன்றிய, பேரூர், கிளைகளின் எல்லைகள் மறு சீரமைப்பு
குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட செயலாளர்
முத்துசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி இடையே, சிறிது நேரம்
வாக்குவாதம் நடந்தது. தலைமை கழக பிரதிநிதிகள் இருவரையும் சமரசம்
செய்ததாகவும், கட்சியினர் தெரிவித்தனர்.