மகள் மாயம் தந்தை புகார்
விழுப்புரம்: வளவனுாரில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனம் அருகே ஒலக்கூரை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி சுகன்யா,30; இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில், சுகன்யா விழுப்புரம் அருகே வளவனுாரில் உள்ள தனது தந்தை வினாயாகம் வீட்டிலிருந்து கடந்த 7 ம் தேதி வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. வினாயகம் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.