Crime, law and justice
ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ் வத்தலகுண்டு அருகே பரபரப்பு

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே, பிடிக்க வந்த போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடி ராஜா, 54, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே, சிக்கனன்பட்டியைச் சேர்ந்த ரவுடி ராஜா, 2013ல் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். சமீபத்தில் ஜாமினில் வந்தார்.
கொலை வழக்கில் தனக்கு எதிராக சாட்சி அளித்தவர்களை ராஜா மிரட்டுவதாக, திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு புகார் வந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில், தனிப்படை போலீசார் அவரை தேடினர். அவரது தாய் ஊரான வத்தலகுண்டு அருகே, என்.கோவில்பட்டியில் உள்ள தோட்டத்தில், ராஜா பதுங்கி இருப்பது தெரிந்தது.
எஸ்.ஐ., அருண்பிர சாத் தலைமையிலான தனிப்படை போலீசார், ராஜாவை சுற்றி வளைத்தனர். அப்போது ராஜா, அரிவாளால் தாக்கியதில் அருண்பிரசாத் காயமடைந்தார். உடனே, எஸ்.ஐ., தற்காப்புக்காக, ராஜாவின் முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டார்.
எஸ்.ஐ., மற்றும் ராஜா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி., ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். ராஜா மீது, 22 வழக்குகள் உள்ளன. இதற்கிடையே, ரவுடி ராஜா, போலீசாரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.