Crime, law and justice
டாஸ்மாக்கில் புகுந்து பணியாளர்கள் மீது தாக்கு
பெரியகுளம்:பெரியகுளம் ஒன்றியம் வைகைபுதூரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி 49. வடுகபட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளர். இவருடன் அரண்மணைப்புதூர் முல்லைநகரைச் சேர்ந்த ஞானசேகரன் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத இருவர், டாஸ்மாக்கில் மது வகைகள் சிலவற்றின் பெயர் கூறி கேட்டுள்ளனர். அவை இல்லை என ஜெயபாண்டி தெரிவித்தார்.
'கேட்குற சரக்கு இல்லைனா எதுக்கு கடை நடத்துகிறீர்கள்' என அவதூறாக பேசினர். கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர். தடுத்த ஞானசேகரனை பாட்டிலால் தாக்கினர். இதனை தடுக்க வந்த ஜெயபாண்டியையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். காயமடைந்த இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர்.