Crime, law and justice
டாஸ்மாக் கடையில் தகராறு; 5 பேர் காயம்
பெருந்துறை:பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோடு காமராஜ் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 30; தனியார் பால்
காஞ்சிக்கோவில் ரோடு காமராஜ் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 30;
தனியார் பால் விற்பனையாளர். ஓய்வு நேரத்தில் சீலம்பட்டியில் டீக்கடை
நடத்தும் தாயாருக்கு உதவியாக இருப்பார். தந்தை மனநிலை
பாதிக்கப்பட்டவர்.
வாங்கி கொடுப்பது வழக்கம். கடந்த, 3ம் தேதி இரவு பெருந்துறை-பவானி
ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க தமிழரசன் வரிசையில் நின்று
கொண்டிருந்தார். அப்போது பெருந்துறை காடபாளையம் வெற்றிவேல், 30,
மாசி ஆகியோர், வரிசையில் நிற்காமல், மது வாங்கியுள்ளனர். இதை தட்டி
கேட்ட தமிழரசனை, நண்பர்கள் சனோஜ், பாட்ஷா ஆகியோருடன் சேர்ந்து
தாக்கியுள்ளனர்.
அங்கிருந்து ஓடிய தமிழரசன், பால் பாக்கெட்
வெட்டுவதற்காக பைக்கில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்தார்.
நான்கு பேரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த நான்கு
பேரும், தமிழரசனும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பெருந்துறை
போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.