Politics
சோனியாவின் சுயசரிதை: ஹாா்ப்பா் காலின்ஸ் நிறுவனம் நவ. 10-இல் வெளியிடுகிறது

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடவுள்ளதாக ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புத்தகத்தில், சோனியா காந்தி இத்தாலியில் இருந்தபோதான ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், 19-ஆவது வயதில் பிரிட்டனில் வைத்து ராஜீவ் காந்தியை காதலித்தது, 3 ஆண்டுகளுக்குப் பின் அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் மருமகளாக மாறியது குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல, இந்திரா காந்தியிடம் முதல்முறை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிகழ்வு முதல், ஹிந்தி கற்க எடுத்த முயற்சிகள், சேலை அணியக் கற்றதும், இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி பிரதமரானது, ராஜீவ் படுகொலைக்குப் பின் சோனியா விருப்பமின்றி அரசியலுக்கு வந்தது என அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் இப்புத்தகத்தில் நினைவு கூறப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகம் வருகிற நவம்பர் 10 அன்று வெளியாகும் என உலகப் புகழ்பெற்ற புத்தகப் பதிப்பக நிறுவனமான பெங்குவின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் வெளியிடுவதாக அறிவித்திருந்தது.
ஆனால், புத்தகத்தில் சில மாற்றங்களைச் செய்து, சில பகுதிகளை நீக்குமாறு பதிப்பகம் சார்பில் வைத்த கோரிக்கைக்கு சோனியா காந்தி மறுப்புத் தெரிவித்ததால் அந்நிறுவனம் புத்தகத்தை பதிப்பிக்க மறுத்து விலகியது.
இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற 'ஹார்பர் காலின்ஸ்’ (HarperCollins) நிறுவனம் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ’ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான பதிவில், “சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்' என்ற நூலை ஹார்பர் காலின்ஸ் இந்தியா வெளியிடவுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுயசரிதை புத்தகம், 2026 நவம்பர் 10 அன்று இந்தியாவில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், திட்டமிட்டபடி சோனியா காந்தியின் சுயசரிதை இந்தியாவில் வெளியாகவுள்ளது.
HarperCollins Publishers has announced that it will publish Sonia Gandhi's autobiography.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.