Lifestyle and human interest
நகரில் தெரு நாய் தொல்லை :மக்கள் நடமாடுவதில் சிரமம்
ஊட்டி : ஊட்டியில் நகரில் தெரு நாய் தொல்லை அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமாக உள்ள ஊட்டியில் தினமும் திரளான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக, ஊட்டி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை , ஸ்டேட் பேங்க் லைன், ஏ.டி.சி. , மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் அச்சத்துடன் செல்வதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்