Politics
கொலை மிரட்டல் வழக்கில் ஆதனுார் ஊராட்சி தலைவர் கைது
சென்னை, ஆக.18---– அடியாட்கள் மூலம் மருமகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தி.மு.க.,வை சேர்ந்த ஆதனுார்
அடியாட்கள் மூலம் மருமகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தி.மு.க.,வை சேர்ந்த ஆதனுார் ஊராட்சி தலைவர், 55 வயதான தமிழ் அமுதன் நேற்று கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகேயுள்ள ஆதனுார் ஊராட்சியின் தலைவர் தமிழ் அமுதன் தி.மு.க.,வை சேர்ந்தவர். இவரது மகள் ஓவியாவும், அவரது கணவர் தமிழ்செல்வனும், 35, குடும்ப தகராறு காரணமாக கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், சமாதான பேச்சு நடத்த ஊராட்சி தலைவர் தமிழ் அமுதன், தன் மருமகன் தமிழ் செல்வனை ஆதனுாரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு பேச்சு நடந்தபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தமிழ் அமுதன் மற்றும் அவரது உறவினரான கூடுவாஞ்சேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி டேனியல், 30, ஆகியோர் சேர்ந்து, தமிழ்செல்வனை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது தமிழ்செல்வன் தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மணிமங்கலம் போலீசார் அடியாட்களை வைத்து மருமகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ஆதனுார் ஊராட்சி தலைவர் தமிழ் அமுதன் மற்றும் ரவுடி டேனியலை நேற்று கைது செய்தனர். அதேபோல், துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில், தமிழ்செல்வனையும் கைது செய்தனர்.