Economy, business and finance
பெண் தவற விட்ட 3 பவுன் நகை ஒப்படைத்த ரயில்வே போலீஸ்
ஈரோடு:ஈரோடு ரங்கம்பாளையம் ரயில் நகரை சேர்ந்த சல்மான் கான் மனைவி திஷானோபர், 24; இவரது தங்கை பாசிலா ஷப்னத்தை,
ரயில் நகரை சேர்ந்த சல்மான் கான் மனைவி திஷானோபர், 24; இவரது தங்கை
பாசிலா ஷப்னத்தை, சென்னைக்கு வழியனுப்ப குடும்பத்தினருடன் ஈரோடு
ரயில்வே ஸ்டேஷனுக்கு கடந்த, 6ம் தேதி இரவு வந்தார்.
பிளாட்பார்மில் ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில்,
தான் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருப்பதை
கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில்
மறுநாள் புகாரளித்தார்.
'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய தயாராகினர்.
இதற்கிடையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பிரமோத், ரயில்வே ஸ்டேஷன்
சுரங்கப்பாதை பகுதியில் கிடந்த மூன்று பவுன் நகையை எடுத்து
உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. திஷானோபரிடம் நகை
வாங்கிய ரசீது மற்றும் அடையாளங்களை சரிபார்த்து, நேற்று முன்தினம்
நகை ஒப்படைக்கப்பட்டது. நகையை கண்டுபிடித்து கொடுத்த ரயில்வே
போலீசார், பாதுகாப்பு படை வீரருக்கு, திஷானோபர் குடும்பத்தினர் நன்றி
தெரிவித்து கொண்டனர்.