Politics
இலங்கை மாஜி அதிபர் ராஜபக்சே மகன் கைது

கொழும்பு:'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்காக, விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நமல் ராஜபக்சே, 40, ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
நம் அண்டை நாடான இலங்கையின் முன்னாள் அதிபரும், எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் ராஜபக்சே. இவர் தன் தந்தையின் ஆட்சி நடந்த 2013ல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில், பல்வேறு வங்கி கணக்குகள் வாயிலாக 7.52 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் நமல் ராஜபக்சேவை நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்திருந்தது. இதைத் தொடர்ந்து, ஆணையத்தின் முன் ஆஜரான அவரிடம் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின் நமல் கைது செய்யப்பட்டு கொழும்பு மாஜிஸ்திரேட் அசாங்க எஸ்.போதேரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வருகிற 18ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தேசிய மக்கள் சக்தி கட்சி தலைமையிலான தற்போதைய அரசு பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
