Religion
மாட்டுச்சந்தையில் அன்னதானம் வழங்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாட்டு சந்தையில், ஒன்பதாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி துணைத்தலைவர் கவுதமன் தலைமை வகித்தார்.
தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், கவுன்சிலர் செந்தில்குமார், மாட்டு வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் முன்னிலை வகித்தனர். சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், மாட்டு சந்தை வியாபாரிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.