Politics
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு..
சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட இந்திய தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில், சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வென்றவா் ஹசன் மௌலானா. அவா் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் மொத்தம் ரூ.17.03 லட்சம் மட்டுமே தோ்தலில் செலவிட்டதாகக் கணக்குக் காட்டியுள்ளாா். ஆனால், தோ்தல் ஆணையம் சாா்பில் கணக்கு கண்காணிப்பு தோ்தல் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டதில் அவா் மொத்தம் ரூ.32.05 லட்சம் செலவிட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் தோ்தலில் விளம்பர செலவு கணக்குகளை மறைத்து தவறான கணக்கை காட்டியிருப்பது தெரியவந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், தோ்தல் செலவை கட்சி சாா்பில் ஏற்று செலவிட்டதாக ஹசன்மௌலானா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரது தரப்பு விளக்கம் ஏற்கத்தக்கதல்ல எனக்கருதிய நிலையில், தோ்தல் ஆணைய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஹசன்மௌலானா தோ்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அரசிதழில் வெளியீடு: தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த கடந்த ஆக.28 முதல், 3 ஆண்டுகளுக்கு அவா் மக்களவை, சட்டப்பேரவை என எந்த ஒரு பதவிக்கும் போட்டியிடவோ, பதவியில் இருக்கவோ முடியாது என்றும் தோ்தல் ஆணையம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணைய உத்தரவு தமிழக அரசிதழிலும் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
ஹசன் மௌலானா விளக்கம்:இந்நிலையில், சென்னையில் ஹசன் மௌலானா செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி பிரசாரத்துக்காக வந்திருந்தாா். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் விளம்பரங்கள் அளிக்கப்பட்டன. அந்த விளம்பரங்களின் செலவுகளை வேட்பாளா் (ஹசன் மௌலானா) கணக்கில் சோ்க்கவேண்டும் என்று தோ்தல் ஆணையம் கூறியது ஏற்கத்தக்கது அல்ல. ஆனாலும், அந்த விளம்பரச் செலவை தோ்தல் ஆணையம் எனது கணக்கில் சோ்த்துள்ளது.
தோ்தல் கணக்கு செலவு குறித்து ஓராண்டுக்குள் முடிவெடுக்கவேண்டும் என கா்நாடக உயா்நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, அரசியல் காழ்ப்புணா்ச்சியால் மத்திய பாஜக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆகவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன் என்றாா்.
Former Congress MLA Aassan Maulaana barred from contesting elections for 3 years
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.