பல்கலை அளவில் ஜூடோ, மல்யுத்தம்
சேலம்:சேலம் பெரியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில், கோரிமேடு அரசு மகளிர் கலை கல்லுாரியில், பல்கலை அளவில்

பெரியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில், கோரிமேடு அரசு மகளிர்
கலை கல்லுாரியில், பல்கலை அளவில் கல்லுாரிகள் இடையே ஜூடோ, மல்யுத்த
போட்டிகள் நேற்று நடந்தன. பெரியார் பல்கலை உடற்கல்வித்துறை
இயக்குனர் வெங்கடாஜலம், கல்லுாரி முதல்வர் காந்திமதி
தொடங்கிவைத்தனர்.
இருந்து, 40 கல்லுாரிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர். ஆண்கள், பெண்களுக்கு ஜூடோ போட்டி நடந்தது. இன்று
பெண்களுக்கு மல்யுத்த போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்கள்,
ஜனவரியில் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெறுவர்.
ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார், ஆண்கள்
ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா
செய்திருந்தனர்.