Politics
தி.மு.க., செயற்குழு கூட்டம்
திருப்புத்துார்,செப்.9- திருப்புத்துாரில் தி.மு.க., மறுசீரமைப்புக் குறித்த சிவகங்கை மாவட்ட செயற்குழுக்
திருப்புத்துாரில் தி.மு.க., மறுசீரமைப்புக் குறித்த சிவகங்கை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் அ.கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் த.சேங்கை மாறன் வரவேற்றார். தொகுதி மறுசீரமைப்புக்குழு பார்வையாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா மறு சீரமைப்புக் குழு தீர்மானங்கள் குறித்து விளக்கினார். முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் மாநில செயற்குழுக் கூட்ட தீர்மானங்களை விளக்கினார்.புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியில் மறு சீரமைப்பு பணிகளை துவக்க தீர்மானங்கள் நிறைவேறின. மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.