Religion
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
செப். 11 கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, யானை மஹால் நுாறு கால் மண்டபத்தில்
* கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, யானை மஹால் நுாறு கால் மண்டபத்தில் விக்னேஸ்வர பூஜை, சூரியனிடமிருந்து யாகத்திற்கு அக்னி எடுத்தல், பழைய திருக்கல்யாண மண்டபத்தில் ஆச்சார்ய வர்ணம், தீபாராதனை, காலை 7:00 முதல் 10:00 மணி வரை, கம்பத்தடி மண்டபத்தில் திருக்குட வழிபாடு, இறை சக்தியை திருக்குடத்தில் எழுந்தருளச்செய்தல், முதல்கால யாகவேள்வி துவக்கம், மாலை 4:35 முதல் இரவு 8:30 மணி வரை.
* சர்ச் பெருவிழா - இறை அழைத்தல் தின சிறப்புத் திருப்பலி: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தலைமை: ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச் பசிலிக்கா அதிபர் ஆல்பர்ட் முத்துமாலை, மறையுரை: கடமலைக்குண்டு பாதிரியார் குணா, மாலை 6:00 மணி. ஜெபமாலை, மாலை 5:30 மணி.
* உலக சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு சிகாகோ சொற்பொழிவு தின நிகழ்ச்சிகள்: சாரதா வித்யாலயம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 10:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், இரவு 7:00 மணி.
* இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இ.சி.ஜி.சி., வழங்கும் திட்டங்களும் ஆலோசனைகளும்: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினர்: இ.சி.ஜி.சி., மூத்த மேலாளர் சுபாஷ் குமார், காலை 11:00 மணி.
* விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்து பயிலரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், தாளாளர் குமரேஷ், ஏற்பாடு: கணினிப் பயன்பாட்டுடன் கூடிய வணிகவியல் துறை, மதியம் 2:30 மணி.
* நாடக போட்டி: யாதவர் கல்லுாரி, மதுரை, முன்னிலை: கல்லுாரி தலைவர் வெங்கடாசலபதி, துவக்கி வைப்பவர்: செயலாளர் கே.பி.எஸ்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: ஓட்டல் செந்துார் நிர்வாக இயக்குநர் அழகர்சாமி, ஏற்பாடு: ஆங்கில துறை, காலை 9:30 மணி.
* முதுகலை வரலாற்று மன்றம் தொடக்க விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: விருதுநகர் வி.வி.வன்னியபெருமாள் மகளிர் கல்லுாரி இணைபேராசிரியர் நட்சத்திர செல்வகுமாரி, ஏற்பாடு: முதுகலை மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை, காலை 10:00 மணி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., அமைப்பு, காலை 10:00 மணி.
* விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம்: விவேகானந்தா கல்லூரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்: முன்னாள் துணை முதல்வர் இளங்கோ, காலை 10:40 முதல் 12:40 மணி.
* பாரதியார் நினைவஞ்சலி: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: ஆடிட்டர் சேது மாதவா, சிறப்பு விருந்தினர்: ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, காலை 9:00 மணி.
* பாரதியார் நினைவு தினம்: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: மதச்சார்பற்ற ஜனதாதளம் துணைத் தலைவர் சேகர், சிறப்பு விருந்தினர்: மாநில பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, காலை 10:00 மணி.
* நான்காம் தமிழ்ச் சங்க ஆண்டுவிழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, கல்லுாரி செயலாளர் தசரதராமன் தலைமையில் இளையோர் அரங்கம், காலை 10:00 மணி, கம்பன் கழக தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமையில் கவியரங்கம், காலை 11:00 மணி, மாணவர்களின் வில்லுப்பாட்டு, மதியம் 1:30 மணி, சங்க இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் குறித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வனின் கருத்தரங்கம், மதியம் 2:00 மணி.
* இலவச மூச்சுப் பயிற்சி: கீதா நடனகோபால நாயகி மந்திர், ஆண்டாள்புரம், மதுரை, காலை 6:15 மணி, பெண்களுக்கு காலை 10:30 மணி, பாலாஜி நர்சிங் ஹோமில் இருபாலருக்கு, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், மாலை 5:30 மணி.
* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பள்ளி மாணவர்களுக்கான கபடி, கால்பந்து, பள்ளி மாணவிகளுக்கான இறகுபந்து, கூடைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து, கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டிகள், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.



