Arts, culture, entertainment and media
அண்ணாதுரை பிறந்தநாள் விழா
தர்மபுரி:அண்ணாதுரையின், 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தர்மபுரியில் அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கவுதம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, நான்கு ரோடு பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மச்செல்வன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், அசோகன் ஆகியோர் தலைமையில், மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ராஜேந்திரன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்று அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
* முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு, நகர செயலாளர் பாபு தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்பட, பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., சார்பில், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு நகர செயலாளர் முல்லைரவி தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அதேபோல், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களிலும், அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.