Lifestyle and human interest
டில்லியில் பிரதமர் மோடி உடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பு

புதுடில்லி: டில்லி வந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு டில்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல நாட்டு தலைவர்கள் டில்லி வந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பான கடல் வழி பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அமெரிக்கா தாக்குதல் துவங்கிய பிறகு, ஈரான் அதிபர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். பிஷ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் போது மசூத் பெசெஷ்கியானை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.