Politics
தி.மு.க., செயற்குழு கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், ஓசூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்
தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சியின் மறு சீரமைப்பு பணிக்-காக தலைமை கழக்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள மாநில ஆதிதிரா-விடர் நலக்குழு செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர், கட்சி நிர்-வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், கிருஷ்ண-கிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், கிருஷ்ண-கிரியில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில ஆதிதிரா-விடர் நலக்குழு செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் பேசினர்.