Arts, culture, entertainment and media
ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி:தேனி நகராட்சி அலுவலகம் அருகே அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும், காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்.
காப்பீட்டிற்கு பிடித்தம் செய்யும் தொகை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. த்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவமணி, இணைச்செயலாளர் ஜானகி, நிர்வாகி துரைராஜ், பள்ளி கல்லுாரி ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகி சவுக்கத்அலி, ஓய்வு பெற்ற போலீசார் நலச்சங்க நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.