மாதாந்திர பராமரிப்பு பணி ரயில்கள் சேவைகளில் மாற்றம்
மதுரை: மதுரை, சேலம் கோட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பகுதி ரத்து n செப். 8, 15, 22, 23, 24, 25, 29ல் மதுரை - ராமேஸ்வரம் - மதுரை (56711/56714) ஆகிய ரயில்கள் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.
n செப். 10, 12ல் துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் (16766), செப். 13ல் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06030) ஆகிய ரயில்கள் போத்தனுார் - மேட்டுப்பாளையம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.
மாற்றுப் பாதை n செப். 10, 24ல், செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் (16848) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. நாகர்கோவில் - மும்பை எல்.டி.டி., ரயில் (16352) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
n செப். 14, 19, 21, 22, அக். 5, 6, 8, 9ல் நாகர்கோவில் - கோவை ரயில் (16321) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படுகிறது.
n நாகர்கோவில் - காச்சிகுடா ரயில் (16354) செப். 5, 19ல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாகவும், செப். 26, அக். 3ல் திண்டுக்கல், கரூர் வழியாகவும் இயக்கப்படுகிறது.
n செப். 5 முதல் அக். 1 வரை சனி, செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் கோவை - நாகர்கோவில் ரயில் (16322) கோவை, பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகிறது.
n செப். 23ல் திருநெல்வேலி - மும்பை எல்.டி.டி., ரயில் (22630) கோவை செல்லாமல் இருகூரில் இருந்து போத்தனுார் வழி செல்கிறது.


