Arts, culture, entertainment and media
நீதிமன்ற புறக்கணிப்பு
வேடசந்துார்:குடகனாறு ராஜவாய்க்கால் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு தண்ணீர் திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் மட்டுமின்றி வழியிடை பகுதிகள், குடகனாறு அணை பகுதிகளுக்கு நீர்வரத்து இல்லை. இந்த தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி வேடசந்துார் அனைத்து வர்த்தக சங்கத்தினர் (செப்.,7) கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் வேடசந்துார் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்திலும் ராஜவாய்க்கால் தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நாளை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.