Politics
ரூ.1.53 கோடியில் நலத்திட்ட உதவி
எலச்சிபாளையம்:கொன்னையார் கிராமத்தில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் முகாமில், 172 பயனாளிகளுக்கு, 1.53 கோடி
கிராமத்தில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் முகாமில், 172
பயனாளிகளுக்கு, 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை,
கலெக்டர் மதுபாலன் வழங்கினார்.
கிராமத்தில், நேற்று வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை சார்பில்
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர்
மதுபாலன் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,
கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளர்ச்சி,
குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு, ஊரக
வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்துகொண்டது. இந்த துறைகளில்
செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்க கண்காட்சி அரங்குகள்
அமைக்கப்பட்டிருந்தது.
தேர்வு செய்யப்பட்டு, 1.53 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை
கலெக்டர் வழங்கினார். தி.கோடு ஆர்.டி.ஓ., லெனின், மாவட்ட நல அலுவலர்
பூங்கொடி, தனித்துணை கலெக்டர் கற்பகம், கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் அருளரசு, வேளாண்மை இணை இயக்குனர் பிரேமா உள்ளிட்ட
பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
