Politics
38 ஆண்டுகளில் முதல்முறை..! இலங்கை சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர்!

இலங்கை அதிபருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு...
இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் - எக்ஸ்/ அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 8) இலங்கை நாட்டுக்குச் சென்றடைந்தார். அவருடன் மத்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளின் முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
இலங்கையில், அதிபர் அநுரகுமார திசநாயக தலைமையில் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்தை இலங்கை அதிபரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில், இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு, கூட்டறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை விமானப் படைக்கான எல்70 ரக துப்பாக்கிகளை மேம்படுத்துவது மற்றும் இருநாடுகளின் தேசிய மாணவர் படை (என்சிசி) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் (என்டிசி) இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கைக்கு 6 எல்70 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் சார்பில் மேம்படுத்தி தரப்படும் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், இலங்கை அதிபர் திசநாயக மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் இணைந்து இந்திய பாதுகாப்புப் படைகள் கட்டிய 3 பெய்லி பாலங்களைக் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தனர். மேலும், கொழும்புவில் உள்ள இந்திய அமைதிப் படையினரின் நினைவுத் தூணில் ராஜ்நாத் சிங் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளது கடந்த 38 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Defence Minister Rajnath Singh met Sri Lankan President Anura Kumara Dissanayake in person and held discussions.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.