Politics
மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ஓசூர்; கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செய-லாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்-குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நாளை (செப்., 6) மதியம், 3:00 மணிக்கு ஓசூரிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் மறுசீரமைப்பு தலைமை நிர்வாகிகள், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளர் கிருஷ்ண-சாமி, மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர் முன்னிலை வகிக்-கின்றனர். கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்-குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி-களின் துணை அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், தலை-வர்கள், துணைத்தலைவர்கள், துணை அமைப்பா-ளர்கள், வார்டு, கிளை செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.