Politics
இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு இடங்களில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசிடம், 20 இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில், 21 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு சித்தணி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனுார் , பண்ருட்டி அடுத்த கொள்ளு காரன்குட்டை ஆகிய இடங்களில் நினைவு துாண்கள் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் 12: 45 மணியளவில் பா.ம.க., தலைவர் அன்புமணி கட்சி கொடி ஏற்றி வைத்து பின்னர் நினைவு துாண்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார்.
சிவக்குமார் எம். எல். ஏ., மாவட்ட தலைவர் புகழேந்தி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி,மாநில இளைஞரணி துணைத் தலைவர் வரதராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன்,மாவட்ட தலைவர் தங்கஜோதி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாநில மாணவர் அணி செயலாளர் அரவிந்தன்,முருகன்,
முன்னாள் மாவட்ட செயலாளர் குமரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரவி நிர்வாகிகள் சுரேஷ், புண்ணியகோடி, காமராஜ், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
