ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை: விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில்வே பணிமனையில், இன்று மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனால், தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், செப்.10 திண்டிவனம் வரை இயக்கப்படும். விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயில், இன்று 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.