புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
வெண்ணந்துார்:ஈரோடு மாவட்டம், பழையபாளையம் பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலாளி காசிவிஸ்வநாதன் மகள் தாரணி, 28.
மாவட்டம், பழையபாளையம் பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலாளி
காசிவிஸ்வநாதன் மகள் தாரணி, 28. இவருக்கும், வெண்ணந்துார் பகுதியை
சேர்ந்த ரமேஷூக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.
பெங்களூருவில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த, நான்கு நாட்களாக விடுமுறையில் இருந்த ரமேஷ், மனைவி தாரணியுடன்
வெண்ணந்துாரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம்
இரவு, பெங்களூரு செல்வதற்காக ரமேஷ் புறப்பட்டு சென்றார்.இதையடுத்து,
தாரணி வீட்டில் உள்ள படுக்கையறைக்கு சென்று கதவை உள்பக்கமாக
தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு துாங்கினார். நேற்று காலை, அவரது மாமியார்
கதவை திறக்க முயன்றபோது, கதவு திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர்
உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சேலையில்
துாக்கிட்டு தாரணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தாரணியின் பெற்றோர் அளித்த புகார்படி, வெண்ணந்துார் போலீசார்
விசாரித்து வருகின்றனர். திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் தாரணி
உயிரிழந்ததால், நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி விசாரிக்கிறார்.