Crime, law and justice
நடுவக்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
திருக்கழுக்குன்றம், செப். 11– நடுவக்கரை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர், வெயில்,

நடுவக்கரை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர், வெயில், மழையிலும் அவதியடைந்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சியில் இருந்து, நெரும்பூர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக
கருமாரப்பாக்கம், நடுவக்கரை, நெரும்பூர், வாழத்தோப்பு, நல்லத்துார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
பல்வேறு நகர பகுதிகளுக்கு செ ன்று வருகின்றனர்.
திருக்கழுக்குன்றத்தில் இருந்து நல்லாத்துார் வழியாக வாயலுார் செல்லும் அரசுப் பேருந்து, செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் வழியாக விட்டிலாபுரம், புதுப்பட்டினம் வரை சென்று வருகின்றன.
நடுவக்கரை காமராஜர் நகர் பகுதியின் இருபுறமும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள நிழற்குடை மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வெயில் மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்து நிறுத்துமிடத்தில் பயணியர் அமர்வதற்காக தற்காலிகமாக இருக்கை மட்டுமே உள்ளது.
எனவே, நடுவக்கரை பேருந்து நிறத்தத்திலல் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.