ஆடிட்டர் வீட்டில் திருடியவர் கைது
கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆடிட்டர் வீட்டில் திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் மீட்டு, திருடிய நபரை கைது செய்தனர்.
வெங்கடாசலம் காலனிஆடிட்டர் சூரியநாராயணன் வீட்டில் கடந்த 1ம் தேதி பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், வெள்ளிப் பொருட்கள், பழைய நாணயங்கள், பணத்தை திருடிச் சென்றார்.
ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரித்து குணசீலன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் கோர்ட் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.