விபத்தில் பள்ளி வேன் டிரைவர் பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இடையமேலுார் சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளியில் இன்று நடக்கும் விளையாட்டு விழா பயிற்சிக்காக, விடுமுறை நாளான நேற்று அப்பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து கொண்டு, பள்ளி வேன் சென்றது. நேற்று காலை, 9:00 மணிக்கு கோமாளிபட்டி அருகே சென்றபோது, மேலுாரில் இருந்து கிராபைட் ஆலை நுழைவு வாயிலுக்கு செல்ல திரும்பிய லாரியின் பக்கவாட்டு பகுதியில், பள்ளி வேன் மோதியது.
இதில், சிவகங்கையை சேர்ந்த வேன் டிரைவர் எத்திராஜ், 65, பலியானார். மாணவர்கள், 10 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு, பள்ளி தாளாளருக்கு, தனியார் பள்ளிகள் இயக்ககம், நோட்டீஸ் வழங்கி உள்ளது.