Arts, culture, entertainment and media
Solomon Pappaiah | சாலமன் பாப்பையா மறைவு.. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்!
தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் காலமானார்.

சாலமன் பாப்பையா மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் இலக்கிய மாமேதை – பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார் என்ற செய்தி துன்ப இடியாக என்னை தாக்கியது. 1960களில் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். மதுரை வளவன் என்ற பெயரில் இலக்கிய மேடைகளில், பட்டிமன்றங்களில் நேரடையாக காண்போர், தொலைக்காட்சிகள் வழியாக பார்ப்போர் என இலட்சோப இலட்ச தமிழ் மக்களை தமிழ் இலக்கியத்தின் பால் மந்திரச் சொல்லாக கட்டிப் போட்டவர் சாலமன் பாப்பையா. 1962 ஆம் ஆண்டு எட்டயபுரம் பாரதி விழாவில் அவர் பேச்சை கேட்டு சொக்கிப்போனேன். பாரதி பாடலை கணீர் என்ற குரலில் அற்புதமாக பாடுவார். அதன்பின்னர் அந்தப் பேச்சும் நகைச்சுவையும், கேட்போரை ஈர்க்கும் இலக்கிய புலமையும் இணைந்தே அவரது உரை அமையும். அவர் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு திருக்குறளுக்கு அற்புதமாக விளக்கம் தருவார். உரையாசிரியர்களின் உரையை உள்வாங்கி இருப்பார். ஆனால் கேட்பவர்களுக்கு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் எனும் திருகுறள் வரிகளுக்கு ஏற்ப அவரது பேச்சு அனைவரையும் வசீகரிக்கும்.
இலக்கிய புலமை பெற்றவர்களும் அதிலே ஈர்க்கப்படுவார்கள். சாதாரண பாமர மக்களும் உள்வாங்கி கேட்டுப் பயன்பெறுவார்கள். பட்டிமன்றத்தில் நடுவராக அவர் இருதரப்பினரின் கருத்துக்கும் இடை இடையே குறுக்கீடாக இரண்டு வாக்கியங்களைச் சொல்வார். கேட்டுக் கொண்டிருப்பவர்களும், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். கருத்தும் ஆழ்மனதில் பதியும். அவரோடு பல பட்டிமன்றங்களில் 60களில் பேசியிருக்கிறேன். என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று திருக்குறள் பட்டிமன்றத்திற்கு நடுவராக அவர் ஆற்றிய உரைகள் மறக்க முடியாதவை.
பொதுவுடமை இயக்க சிந்தனை, சமதர்ம கண்ணோட்டம், அவரது எளிமை பழகும் நண்பர்களிடத்தில் அவர் காட்டுகின்ற பரிவு, மரியாதை அவருக்கு மென்மேலும் புகழைச் சேர்த்துக் கொடுத்தது. கடந்த இரண்டு நாட்களில் கூட அவர் நடத்தப்போகும் பட்டிமன்றத்தின் சில நிமிடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, அவரது பாண்டித்தியத்தைக் கண்டு பெருமிதம் கொண்டேன். 65 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்திற்கும், செந்தமிழ் மொழிக்கும் அருட்கொடையாக பெரும் சிறப்பு செய்தவர் போற்றற்குரிய சாலமன் பாப்பையா.
அம்மாபெரும் இலக்கிய மாமலைக்கு தமிழக அரசு சிறப்பு செய்து, அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கம் நடைபெற வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். காலத்தால் அழியாத புகழுக்கும், பெருமைக்கும் உரியவரான இலக்கியப் பேரொளி சாலமன் பாப்பையா மறைவால் தாங்க முடியாத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்திருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அப்பெருமகனாரை நெஞ்சில் போற்றும் தமிழன்பர்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை, ஆழ்ந்த இரங்கலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.
#SolomonPappaiah #Sivakarthikeyan #News18TamilNadu pic.twitter.com/RhLSige4BY
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 11, 2026
சாலமன் பாப்பையா மறைவுக்கு பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” என்ற அன்பான குரலின் வாயிலாக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இனிய குழந்தைகளே…”
என்ற அன்பான குரலின் வாயிலாக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் புகழும், தமிழுக்கான அவரது பங்களிப்பும் என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
— R Sarath Kumar (@realsarathkumar) September 11, 2026
தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது. தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் புகழும், தமிழுக்கான அவரது பங்களிப்பும் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையா மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா 91 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா.
பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்கள் 91 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா அவர்கள்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ்ப் பேராசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சமூகத்தில் சிறப்பாக வாழ்ந்தவர். தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
தமிழ் மொழி மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். திரைப்படங்களிலும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர்.
அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் அவரது எண்ணற்ற அன்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக)
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) September 11, 2026
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ்ப் பேராசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சமூகத்தில் சிறப்பாக வாழ்ந்தவர். தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழ் மொழி மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். திரைப்படங்களிலும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் அவரது எண்ணற்ற அன்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“எங்க உயிர் அவர்.. எங்களுடைய ஆலமரம்… சாலமன் பாப்பையா வீட்டில் பணிபுரியும் விஜய்பாரதி கண்ணீர்.
#WATCH | எங்க உயிர் அவர்..எங்களுடைய ஆலமரம்…சாலமன் பாப்பையா வீட்டில் பணிபுரியும் விஜய்பார திகண்ணீர்#RIPSolomonPappaiah #solomonpappaiahpassedaway #News18TamilNadu pic.twitter.com/GXQyHZvDoM
வீட்டிற்கு எடுத்து வரப்பட்ட சாலமன் பாப்பையாவின் உடல்.
#WATCH | வீட்டிற்கு எடுத்து வரப்பட்ட சாலமன் பாப்பையாவின் உடல்#ripsolomonpappaiah #Arapalaiyam #News18TamilNadu pic.twitter.com/XcwOBudBdq
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு சிபிஐ(எம்) வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சாலமன் பாப்பையா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையினாலும் தமிழ்ப் பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்தவர். இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர்.
பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவர். தமிழ் இலக்கியத்திற்கும், கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு பத்மஸ்ரீ, கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர். தனது இளம் வயதில் இளமாறன் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பேசியவர். 2025ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டின் போது நடைபெற்ற கலைவிழாவில் பங்கேற்று பேசியவர். ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்கு சிந்தனையாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சாலமன் பாப்பையா மறைவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தாங்க முடியாத துயரம்! பத்மஸ்ரீ, முனைவர், பேராசிரியர், பட்டிமன்றப் பிதாமகர் சாலமன் பாப்பையா மறைவு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கே மாபெரும் இழப்பாகும். கல்லூரியில் பயிற்றுவித்த தமிழை, பட்டிமன்றங்கள் வாயிலாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று புகழின் உச்சிக்கு உயர்த்திய மாண்புடையவர். தன்னுடைய இறுதி மூச்சு வரை இலக்கிய உலகில் தனி முத்திரையைப் பதித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழர்களுக்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
தாங்க முடியாத துயரம்!
பத்மஸ்ரீ, முனைவர், பேராசிரியர், பட்டிமன்றப் பிதாமகர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கே மாபெரும் இழப்பாகும்.
கல்லூரியில் பயிற்றுவித்த தமிழை, பட்டிமன்றங்கள் வாயிலாகப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று புகழின் உச்சிக்கு உயர்த்திய மாண்புடையவர்.
தன்னுடைய இறுதி மூச்சு வரை இலக்கிய உலகில் தனி முத்திரையைப் பதித்தவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழர்களுக்கும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Rajmohan (@imrajmohan) September 11, 2026
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர். பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வசித்த இல்லத்தில் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. நாளை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் மறைந்த சாலமன் பாப்பையா உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என சாலமன் பாப்பையா உறவினர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும், அவர் சொன்னபடியே உறவினர்கள் செய்யவுள்ளனர்.
மேலும் படிக்க.. https://tamil.news18.com/tamil-nadu/solomon-pappiah-passed-away-cremation-tomorrow-vjr-ws-l-2206936.html
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.#SolomonPappaiah
— Rajinikanth (@rajinikanth) September 11, 2026
சாலமன் பாப்பையாக மறைவுக்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மரியாதைக்குரிய சாலமன் பாப்பையா மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தீபாவளி பட்டாசு வெடிகளோடு பட்டிமன்ற வெடி சிரிப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தோம். பொங்கல் என்று பொங்கலை சுவைப்பது போலவே பொங்கி வரும் அவர் பட்டிமன்றங்களையும் சுவைத்துக் கொண்டிருந்தோம். அது மட்டுமல்ல பத்மஸ்ரீ விருதுக்காக அவரைப் பற்றி பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொழுது அவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அவர் கலந்து கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளில் அத்தனை அழைப்பிதழ்களையும் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறார் என்ற செய்தி உண்மையிலேயே வியப்பான ஒன்று. அழைப்பவர்களையும் மதித்து அழைப்பிதழையும் மதித்து வைத்திருக்கிறார் என்பது ஒரு அரிதான குணம் தான்.. எளிய தமிழை பழகு தமிழாக இல்லங்களுக்கு கொண்டு சென்றதில் சாலமன் பாப்பையாவுக்கு தனி இடம் உண்டு…. பத்மஸ்ரீ பட்டத்திற்கு முழு தகுதியான அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து அழகு பார்த்தது மத்திய மோடி அரசு. என் தந்தை குமரி அனந்தன் சொல்வார்கள் அவர்களெல்லாம் ஒன்றாக பட்டிமன்றம் பேசியிருக்கிறோம் என்று அடிக்கடி சொல்வார்கள். ஆக அப்படிப்பட்ட ஒரு தமிழறிஞரை நாம் இழந்து தவிக்கிறோம்.. தமிழும் தவித்துக் கொண்டிருக்கிறது…” என்று அதில் தெரிவித்துள்ளார்.
மரியாதைக்குரிய சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
தீபாவளி பட்டாசு வெடிகளோடு பட்டிமன்ற வெடி சிரிப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தோம் பொங்கல் என்று பொங்கலை சுவைப்பது போலவே பொங்கி வரும் அவர் பட்டிமன்றங்களையும் சுவைத்துக் கொண்டிருந்தோம் அது மட்டுமல்ல பத்மஸ்ரீ விருதுக்காக அவரைப் பற்றி பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொழுது அவர் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அவர் கலந்து கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளில் அத்தனை அழைப்பிதழ்களையும் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறார் என்ற செய்தி உண்மையிலேயே வியப்பான ஒன்று அழைப்பவர்களையும் மதித்து அழைப்பிதழையும் மதித்து வைத்திருக்கிறார் என்பது ஒரு அரிதான குணம் தான்.. எளிய தமிழை பழகு தமிழாக இல்லங்களுக்கு கொண்டு சென்றதில் சாலமன் பாப்பையா அவர்களுக்கு தனி இடம் உண்டு…. பத்மஸ்ரீ பட்டத்திற்கு முழு தகுதியான அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து அழகு பார்த்தது மத்திய மோடி அரசு . என் தந்தை திரு குமரி அனந்தன் சொல்வார்கள் அவர்களெல்லாம் ஒன்றாக பட்டிமன்றம் பேசியிருக்கிறோம் என்று அடிக்கடி சொல்வார்கள் ஆக அப்படிப்பட்ட ஒரு தமிழறிஞரை நாம் இழந்து தவிக்கிறோம் .. தமிழும் தவித்துக் கொண்டிருக்கிறது…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 11, 2026
சாலமன் பாப்பையா மரணத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “சிறந்த தமிழறிஞரும், தமிழ்நாடு நன்கறிந்த பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11, 2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தையும், வருத்தத்தையும் தருகிறது. சாலமன் பாப்பையா, பிப்ரவரி 22, 1936 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள சாத்தான்குடியில் பிறந்தார். சாலமன் பாப்பையா, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது நகைச்சுவை ததும்பும் எளிய சொற்பொழிவால், வாதத் திறமையால், இனிய குரல் வளத்தால் தலைமுறைகளைத் தாண்டி அனைத்து பிரிவு மக்களையும் கவர்ந்தவர்.
திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’, ‘பத்ம ஸ்ரீ’ உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நினைவில் வாழும் மூத்த தலைவர்களான இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருடன் மிகுந்த நட்பு பாராட்டியவர். தா.பாண்டியன், சாலமன் பாப்பையாவுடன் பல பட்டிமன்றங்களிலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.
சாலமன் பாப்பையா சிறந்த முற்போக்கு சிந்தனையாளர் ஆவார். அவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களின் இலக்கியச் செழுமையை அவர் தனது நூல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில், “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பங்கு மகத்தானது.
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 11, 2026
அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சாலமன் பாப்பையா மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிரித்த முகம் – சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார். பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம். கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வசித்த இல்லத்தில் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்னும் சற்று நேரத்தில் உடல் வைக்கப்பட உள்ளது. நாளை மதியம் அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என சாலமன் பாப்பையா உறவினர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும், அவர் சொன்னபடியே உறவினர்கள் செய்யவுள்ளனர்.
மேலும் படிக்க.. https://tamil.news18.com/tamil-nadu/solomon-pappaiah-passed-away-due-to-health-conditions-public-shocked-nw-anu-2206869.html
“சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும். பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா?. பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?. கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக்
கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர் குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார். அவரது நாற்காலி காலியாகவே இருக்கும். நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது. மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியை படிக்க.. https://tamil.news18.com/entertainment/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-nw-kls-ws-l-2206916.html
தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. இவரின் இழப்பு பலருக்கும் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி தனது 90-ஆவது வயதில் சாலமன் பாப்பையா காலமானார்.
மக்களின் அஞ்சலிக்காக மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள இல்லத்தில் சாலமன் பாப்பையாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும், சாதி, மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால், தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என சாலமன் பாப்பையா உயில் எழுதி வைத்திருந்த நிலையில், மதுரை தத்தநேரி மின்மயானத்தில் நாளை காலை 10 மணிக்கு மேல் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
#JUSTIN பட்டின்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் காலமானார் #SolomonPappaiah #PassedAway #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9 pic.twitter.com/NNjfqiFpFH
