Religion
இன்றைய நிகழ்ச்சி / செப். 5க்குரியது
கோயில் * ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, வெள்ளி இந்திர விமானத்தில் சுவாமி
* கிருஷ்ண ஜெயந்தி விழா: கிருஷ்ணன் கோயில், பஞ்., யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், கோமாதா பூஜை, காலை 6:00 மணி, திருவிளக்கு பூஜை, ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.
* சர்ச் பெருவிழா: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தியானம் மற்றும் ஒப்புரவு வழங்குபவர்: கழுகேர்கடை பாதிரியார் ஜோசப் செங்கோல், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை, அருள் ஆனந்தர் கல்லுாரி பாதிரியார் வின்சென்ட் சேகர் தலைமையில் திருப்பலி, மாலை 6:00 மணி.
* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாதிரியார் மைக்கேல் யூஜின் வழங்கும் திருப்பலி, காலை 11:30 மணி, சிவகங்கை மறைமாவட்ட பாதிரியார் ஜுடு அந்தோணி, பாதிரியார் கமிலேஸ் வழங்கும் திருப்பலி, மாலை 6:00 மணி.
* திரிவேணி விழா – சிவானந்த ஜெயந்தி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் – சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:30 மணி, ஆனந்தி பூர்ணச்சந்திரன் குழுவினரின் வீணை இசை, தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்புரை: ஞானசம்பந்தன், மாலை 6:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.
* சைவ சித்தாந்த சிந்தனை தொடர்: நிகழ்த்துபவர் – அரண் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், ஞானகூத்தர் புனிதர் பேரவை, ஓடைப்பட்டி, கள்ளிக்குடி, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
* கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – தீர்த்தம் விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* குரு உத்ஸவ் – ஆசிரியர் தின விழா: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, அரசனுார், தலைமை: கல்லுாரி தலைவர் மலேசியா பாண்டியன், சரஸ்வதி, முன்னிலை: நிர்வாக இயக்குநர் வரதராஜன், காலை 10:00 மணி.
* ஆரோக்கிய சந்தை – இலவச காளான் வளர்ப்பு பயிற்சி, ஆசிரியர் தின விழா: காந்தி மியூசியம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: துணை கலெக்டர் செல்வன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்தி பாலன், மியூசிய செயலாளர் நந்தாராவ், அபிநயா சில்க்ஸ் இணைச் செயலாளர் சித்ரா, ஏற்பாடு: கிரீன் பெம், காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
* வ.உ.சி., பிறந்தநாள் விழா: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, தலைமை: மன்ற பொருளாளர் மாணிக்கராஜ், சிறப்புரை: சவிதாபாய் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.
* வ.உ.சி., பிறந்தநாள் விழா: வ.உ.சி., சிலை, சிம்மக்கல், மதுரை, தலைமை: மதச்சார்பற்ற ஜனதாதளம் நகர் துணைத் தலைவர் சேகர், சிலைக்கு மாலை அணிவிப்பவர்: மாநில பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, காலை 10:00 மணி.
* கிருஷ்ண ஜெயந்தி, வ.உ.சி., பிறந்தநாள், ஆசிரியர் தினம் – முப்பெரும் விழா: சேவாலயம் மாணவர் விடுதி, செனாய் நகர், மதுரை, ஸ்ரீமந்நாயகி சுவாமிகள் வேதபாடசாலை மாணவர்கள் குழுவின் பிருந்தாவன தீபகேளிகை கோலாட்டம், ஏற்பாடு: ஸ்ரீபூ கல்சுரல் அகாடமி, மாலை 5:00 மணி.
* நுால் விமர்சன அரங்கம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, தலைமை: கவிஞர் பேனா மனோகரன், முருகேசபாண்டியன் தொகுத்துள்ள ‘பள்ளி மாணவர்களுக்கான இறையன்புவின் சிறுகதைகள்’ நுால் விமர்சிப்பவர்: கவிஞர் ரவி, ஆனந்தகுமார் எழுதிய ‘அண்மைக்கால தமிழ் நாவல்கள் கோட்பாடு வாசிப்பு’ நுால் விமர்சிப்பவர்: இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியன், ஏற்பாடு: நியூ செஞ்சுரி வாசகர் சங்கம், மாலை 5:30 மணி.
* வீல்ஸ் அண்ட் ஹீல்ஸ் – உலக முதுகுத் தண்டுவட காயம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணம்: ராஜா முத்தையா மன்றம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை, ஏற்பாடு: பூவந்தி மறுவாழ்வு மற்றும் முதியோர் பராமரிப்பு மையம், காலை 7:30 முதல் 9:00 மணி வரை.
* நியாயமான ஊதிய உயர்வு உட்பட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்துக் காவலர்கள் நலச்சங்கம், காலை 9:00 மணி.
* குழந்தைகள் கற்றல் சிரமம் – இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.