Religion
திருவிருந்தீஸ்வரர் கோயில் யாகசாலை பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு
இன்று காலை 8:30 மணிக்கு கும்பாபிஷேகம்ஆர்.எஸ்.மங்கலம்: ராதானுார் திருவிருந்தீஸ்வரர் கோயில், கும்பாபிஷேக
ஆர்.எஸ்.மங்கலம்: ராதானுார் திருவிருந்தீஸ்வரர் கோயில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற யாக சாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானுார் சவுந்தரநாயகி அம்மன் சமேத திருவிருந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று(செப்.,17) காலை 8:30 மணிக்கு நடக்கிறது. செப்.15 ல் அனுக்ஞை, கணபதி ஹோமம், தன பூஜை வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை விநாயகர் பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகசால பூஜை, விமான கலச ஸ்தாபிதம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 7:00 மணிக்கு நான்காம் காலையாக சாலை பூஜைகளும், நாடி சந்தானம், மகாபூர்ணகுதி, தீபாராதனை நடந்து காலை 8:30 முதல் 10: 00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ராஜவளநாடு ராதானுார் கிராம மக்கள் செய்துள்ளார்.