சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் விபத்து
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம், மேல்முகம் பஞ்., திருச்செங்கோடு-சேலம் சாலையில் அமைந்துள்ள பொன்னியாறு

மேல்முகம் பஞ்., திருச்செங்கோடு-சேலம் சாலையில் அமைந்துள்ள
பொன்னியாறு பாலத்தில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
இறைச்சி கழிவுகளை தின்று வாழும் இந்த நாய்கள் வெறிபிடித்தபடி,
சாலையில் செல்லும் மாணவர்களையும், பொதுமக்களையும் கடிக்க
பாய்கிறது. இதனால், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அச்சத்துடன்
சாலையை கடந்து செல்கின்றனர்.
துாரம் துரத்திக்கொண்டு செல்கின்றன. அப்போது, வாகன ஓட்டிகள்
செய்வதறியாது கீழே விழுந்து உடலில் காயங்கள் ஏற்பட்டு செல்லும்
சம்பவம் அடிக்கடி இப்பகுதியில் நடந்து வருகின்றன. பொதுமக்களை
கடித்துவிட்டால், 'ரேபிஸ்' நோய் தொற்றுகளுக்கு ஆளாகி தடுப்பூசி
செலுத்த வேண்டிய சூழல் உருவாகிவிடும். எனவே, தெருநாய்களை பிடித்து
செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.