Politics
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டசபை – தனி தொகுதிக்ககான இடைத்தேர்லில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, நேற்று நடந்தது.
மதுராந்தகம் சட்டசபை – தனி தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் அக்., 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், மண்டல அலுவலர்கள், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என, 1,368 பேர் பணிபுரிய உள்ளனர்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் பணிபரியும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், டி.எஸ்.பி., வீரக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.