Education
அரசு பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
வாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 59. மன்னாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி, குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலை-மையாசிரியராக பணிபுரிகிறார்.
கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு கற்பித்து வரும் ராஜேந்திரனுக்கு, 2026க்கான, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, நேற்று முன்தினம், சென்னையில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். அவருக்கு, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வாழப்-பாடி லயன்ஸ் கிளப், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்-தனர். அவரது மனைவி ராஜேஸ்வரி, ஏற்கனவே, 'நல்லாசிரியர்' விருது பெற்றவர்.
அதேபோல் ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சகாயராஜிக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. அவரை மான்ட்போர்ட் பாதிரியார்கள்,
பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.