Religion
இன்று இனிதாக: (17.09.2026) திருப்பூர்
n ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா n ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், நான்காம் கால யாக பூஜை - அதிகாலை 5:30 மணி. மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம் - காலை 8:30 மணி. கடங்கள் புறப்பாடு - 9:30 மணி. மஹா கும்பாபிஷேகம், தச தரிசனம், தசதானம் - காலை 10:15 முதல் 10:45 மணி வரை. அன்னதானம் - காலை 8:15 மணி. திருமுருகு பக்தர்கள் காவடியாட்டம் - காலை 11:00 மணி. மஹா அபிஷேகம், மஹா மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் - 11:30 மணி. திருக்கல்யாண வைபவம் - மதியம் 3:00 மணி. நடன நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், மண்டபார்ச்சனை, நாடி சந்தானம், மூலமந்திர ேஹாமம், பூர்ணாகுதி, கலசங்கள் புறப்பாடு - அதிகாலை 5:30 மணி. விமான கோபுரக் கும்பாபிஷேகம், பரிவார, மூலாலய கும்பாபிஷே கம், மஹா அபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை - காலை 7:35 மணி முதல்.
n கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். நான்காம் கால வேள்வி துவக்கம், வேத பாராயணம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை - அதிகாலை 4:00 மணி. யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோவிலுக்கு அழைத்து வருதல் - காலை 7:00 மணி. அன்னதானம் - காலை 7:30 மணி. மஹா கும்பாபிஷே கம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை - காலை 7:45 மணி. மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தச தரிசனம், கோ பூஜை, உற்சவர் பூ அலங்காரத்துடன் திருவீதி உலா வருதல் - மாலை 4:00 மணி.
சஷ்டி சிறப்பு அபிேஷகம் ஸ்ரீ பாலமுருகன், காட்டு மாரியம்மன் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷக பூஜை - காலை, 8:15 மணி.
தொடர் ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைப்பண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, சாய் சிற்பி பள்ளி, பெருந்தொழுவு. ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். இசை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. மங்கள ஆரத்தி - இரவு 8:00 மணி.
மண்டல பூஜை n ஸ்ரீ தேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், திருப்பூர். காலை 6:00 மணி.
n ஸ்ரீ வேப்பமரத்து பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ பொட்டுசாமி கோவில், கட்டபொம்மன்நகர், பாப்பநாயக்கன் பாளையம், திருப்பூர். காலை 7:00 மணி.
n பொது n விசர்ஜன ஊர்வலம் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் துவங்குமிடங்கள், அரசு மருத்துவமனை அருகில், தாராபுரம் ரோடு, திருப்பூர். செல்லம் நகர் பிரிவு, கருவம்பாளையம், திருப்பூர். புதிய பஸ் ஸ்டாண்ட், பி.என்.ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. மாலை 4:00 மணி.
பொதுக்கூட்டம் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல நிறைவு விழா பொதுக்கூட்டம், நடராஜா தியேட்டர் ரோடு, ஆலங்காடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. பங்கேற்பு: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி. கேரள ஹிந்து முன்னணி கேரள மாநில தலைவர் சசிகலா டீச்சர், திரைப்பட நடிகர் ரஞ்சித் இரவு 7:00 மணி.
சிறப்பு கடன் திட்ட முகாம் சாலையோர வியாபாரிகள் கடன் பெறுவதற்கான சிறப்பு கடன் திட்ட முகாம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மையம், பங்களா ஸ்டாப், பாரதியார் வணிக வளாகம், வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி அருகில், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
நிட்பேர் கண்காட்சி 53வது ஆயத்த ஆடை நிட்பேர் கண்காட்சி, ஐ.கே.எப். வளாகம், பழங்கரை, அணைப்புதுார், அவிநாசி. காலை 9:30 முதல் இரவு 8:00 மணி.