Arts, culture, entertainment and media
சாலமன் பாப்பையா மறைவு: அமைச்சர் இரங்கல்
புதுச்சேரி: பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு, அமைச்சர் சிவக்கொழுந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகின் மூத்த அறிஞரும், பட்டிமன்றக் கலையின் முன்னோடி, பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசின் அமைச்சர் என்ற முறையிலும், புதுவை கம்பன் கழகத்தின் செயலாளராகவும், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமது நகைச்சுவை கலந்த தெளிவான உரையாலும், ஆழ்ந்த தமிழ் இலக்கிய அறிவாலும், சங்க இலக்கியம் முதல் திருக்குறள் வரை தமிழின் சிறப்பையும் தமிழர் பண்பாட்டின் உயர்வையும் அனைத்து தரப்பு மக்களிடமும் எளிமையாக எடுத்துச் சென்றவர்.
அவரது மறைவு தமிழறிஞர் பெருமக்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், பட்டிமன்ற உலகிற்கும், உலகத் தமிழ்ச் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.