Politics
சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்
சிங்கம்புணரி, செப். 18–- சிங்கம்புணரியில் ஹிந்து முன்னணி சார்பில் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின்
சிங்கம்புணரியில் ஹிந்து முன்னணி சார்பில் 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் சிங்கம்புணரியில் 40 க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதற்காக ஹிந்து சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் கிராம பிரமுகர் சத்தியசீலன் தலைமையில் நடந்தது. தென்தமிழக கோசேவா ஒருங்கிணைப்பாளர் சாமி அம்பலம் சிறப்புரை ஆற்றினார். ஊர்வலத்தை சரவணன் துவக்கினார். ஐயப்பன் கோயிலில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று சேவுகப்பெருமாள் கோயில் தெப்பத்தில் அனைத்து சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது. விழாவில் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் குகன், பாலசுப்பிரமணியன், கோசேவா பொறுப்பாளர் தினேஷ், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி பங்கேற்றனர்.