Politics
ரூ.86.87 லட்சம் நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 213 பய-னாளிகளுக்கு, 86.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உத-விகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
பர்கூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, தனித்துணை கலெக்டர் அபி-நயா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.