Crime, law and justice
டாஸ்மாக்கில் பணம், மதுபாட்டில்கள் கொள்ள
-- பெரியகுளம், செப். 11- பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தென்னந்தோப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தென்னந்தோப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் அந்தப்பகுதியில் ரோந்து சென்ற தென்கரை போலீசார் இரவு 2:00 மணியளவில் கடையில் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்தனர். விற்பனையாளர் ஜெயபாண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் 50 மது பாட்டில்கள், ரூ.22 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது. இரு தினங்களுக்கு முன் இதே கடையில் ஜெயபாண்டி, உதவியாளர் ஞானசேகரனை இருவர் தாக்கி விட்டு தப்பியது குறிப்பிடத்தக்கது. இதுவரை கைது செய்யப்படவில்லை. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.