Economy, business and finance
ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கா.பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலை-யாண்டஹள்ளி அருகே பந்தேறி நகரை சேர்ந்த ராணுவ வீரர் திருப்பதி. இவரது மனைவி ஜெயஸ்ரீ, 48. கடந்த, 30ம் ஜெயஸ்ரீ வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள தனது இரண்டாவது மகளை பார்க்க சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயஸ்ரீ, வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 6 பவுன் நகை மற்றும் 30,000 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. ஜெயஸ்ரீ அளித்த புகார்படி, காவேரிபட்டணம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.