கண்ணதாசன் நூற்றாண்டு விழா
காரைக்குடி, செப். 6– - காரைக்குடியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கவிஞர்களின்
காரைக்குடியில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கவிஞர்களின் சங்கமம் நடந்தது. கவியரங்கம், கவிதை, நடனம், இசை, நுால் வெளியீடு, பாராட்டு நிகழ்ச்சி, மாணவர்கள் ஊர்வலம் நடந்தது. கோவிலுார் ஆதினம் நாராயண தேசிக சுவாமிகள் துவக்கி வைத்தார். உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர் பிரபு விருதுகள் வழங்கினார். ஏற்பாடுகளை சரஸ்வதி ராமநாதன், இயக்குனர் கலைவேந்தன் செய்திருந்தனர்.