வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
முதுகுளத்துார்: - முதுகுளத்துார் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் 37ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை
முதுகுளத்துார் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் 37ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
போட்டியில் மதுரை,விருதுநகர்,சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள்,150 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகள்,வீரர்களுக்கு குத்துவிளக்கு,சேர்,ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருசில மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.