வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை: சிவகங்கை அருகே கிளுவச்சி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 14 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 126 வீரர்கள் 9 குழுவாக கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் அடங்க மறுத்த காளை உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.