Politics
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வழி நெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர்.
ஊர்வலம் நேற்று மாலை 6:00 மணிக்கு ஹிந்து முன்னணி சார்பில் ராஜபாளையம் கவிமணி தேசிய விநாயகர் தெரு, பெரிய கடை பஜார், சத்திரப்பட்டி, பச்ச மடம், தொட்டியபட்டி, தளவாய்புரம், சின்ன சுரைக்காய் பட்டி, அம்பேத்கர் நகர், எஸ். ராமலிங்காபுரம், சட்டிக்கிணறு, சங்கரபாண்டியபுரம், சேத்துார் உள்பட பலபகுதிகளில் அமைக்கப்பட்ட 29 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அனைத்து விநாயகர் சிலைகளும் பஞ்சு மார்க்கெட்டில் அணிவகுத்த ஊர்வலத்தை வீரக்கொடி வெள்ளாளர் உறவின்முறை செயலர் முருகன் கொடியசைத்து துவக்கினார். ஹிந்து முன்னணி நகர தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சஞ்சீவி, சூரி, சித்திர புத்திரன் வரவேற்றனர். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா பா.ஜ., ஆர்.எஸ். எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசினர். நகரச் செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.