காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக
பால் அபிஷேகம் * தன்வந்திரி பாபாவுக்கு பால் அபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.
கண்ணன் அவதார விழா * சொற்பொழிவு, தலைப்பு, கஜேந்திர மோட்சம், வாமன சரித்திரரம், சொற்பொழிவாளர்: அகரம் சேஷாத்திரி ஸ்வாமி, யதுகுல வேணுகோபால பஜனை கோவில், பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; யானை வாகனத்தில் வேணுகோபாலர் வீதியுலா, இரவு 7:00 மணி.
குருவார சிறப்பு அபிஷேகம் * சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.
சொற்பொழிவு * பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: எறிபத்த நாயனார் மற்றும் ஏனாதிநாயனார் புராணம், சொற்பொழிவாளர்: கஸ்துாரி அம்மையார், ஏற்பாடு: இந்து சமய மன்றம் மற்றும் குருவார வழிபாட்டு மன்றம், மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனம், சங்கரமடம், காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
* தலைப்பு: கம்ப ராமாயணம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
சிறப்பு வழிபாடு * மகம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு * பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம் * அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.