காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
மக்கள் குறை கூட்டம் * காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கம், காஞ்சிபுரம். காலை 10:00 மணி.
கண்ணன் அவதார விழா * சொற்பொழிவு, தலைப்பு, வராஹி சரித்திரம், சொற்பொழிவாளர்: அகரம் சேஷாத்திரி ஸ்வாமி, யதுகுல வேணுகோபால பஜனை கோவில், பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; அன்ன வாகனத்தில் சேஷ வாகனத்தில் வேணுகோபாலர் வீதியுலா, இரவு 7:00 மணி.
தீமிதி திருவிழா * படவேட்டம்ம்மன், சுந்தராம்பாள் 30வது ஆண்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி வசந்த விழாவையொட்டி அம்மன் வீதியுலா, வரசித்தி விநாயகர் கோவில், சி.எஸ்.செட்டி தெரு, காஞ்சிபுரம், காலை 9:00 மணி; சீர்கஞ்சி வார்த்தல், மதியம் 12:00 மணி;
* சுந்தராம்பாள், படவேட்டம்மனுக்கு 44வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் 15வது ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி அம்மன் வீதியுலா, விக்ன விநாயகர் கோவில் வளாகம், வி.என்.பெருமாள் தெரு, சுக்லபாளையம் கோவிந்தன் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 9:00 மணி; சீர்கஞ்சி வார்த்தல், மதியம் 12:00 மணி; ஊரணி பொங்கலுடன் அம்மன் புறப்பாடு மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6:00 மணி.
நாடகம் * கூழ்வார்த்தல் விழாவையொட்டி ஆரணி பத்மா நாடக மன்றத்தினரின், சமூக விழிப்புணர்வு நாடகம், வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவில், நேதாஜி நகர், காஞ்சிபுரம், இரவு 10:00 மணி.
சொற்பொழிவு * தலைப்பு: ராமன் -தசரதா உனக்கு மட்டும் உயிர் இல்லை.இந்த மண்ணுயிருக்கும் அன்பானவன்- வசிட்டர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
சிறப்பு வழிபாடு * புனர்பூசம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு * பள்ளி மாணவ- – மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 – 7:30 மணி வரை; மாலை 5:30 – 6:45 மணி வரை.
அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.